தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கு டிச., 26ம் தேதி முதல் தேர்வு
விருதுநகர்: காரைக்குடி அழகப்பா பல்கலையின் தொலைதூரக் கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு டிச., 26 ம் தேதி முதல் தேர்வு நடக்கிறது. விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் நவ.,7க்குள் அனுப்ப வேண்டும். தவறவிட்டவர்கள் விருதுநகர் கிளையின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் மூலம் அனுப்பி ஹால்டிக்கெட் பெறலாம். செமஸ்டர் முறை தேர்வு எழுதும் மாணவர்களும், தேர்வு எழுதி தவறிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு அழகப்பா பல்கலை விருதுநகர் கிளையை தொடர்பு கொள்ளலாம்.