உள்ளூர் செய்திகள்

பெரியார் பல்கலையில் காசோலை முறைகேடு: 3 பெண் ஊழியர்கள் நீக்கம்

 சேலம்: சேலம், பெரியார் பல்கலையில், காசோலை முறைகேடு தொடர்பாக, மூவர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சேலம், பெரியார் பல்கலையில், ஜூன் மாதத்தில், வெளிமாநில படிப்பு மையங்கள் வழங்கும், காசோலைகளில், பல லட்சம் ரூபாய் வரை, மோசடி செய்த வெங்கடேசன் என்பவரை, போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து விசாரிக்க, சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் கல்வியாளர்கள் கொண்ட, விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இதில் பிரைடு அலுவலகத்தில் பணிபுரிந்த, பெரியார் பல்கலை பணியாளர் சங்க தலைவர், அரசு என்பவரின் மனைவி, சசிகலா, ஜெயலட்சுமி, விஜயலட்சுமி ஆகிய மூவரும், 17.40 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. பணத்தை திரும்ப செலுத்தவும், இவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், இக்குழு பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில், நேற்று, மூவரையும், பணி நீக்கம் செய்து, துணைவேந்தர் முத்துச்செழியன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்