மருத்துவத்திற்கான நோபல் பரிசு: விஞ்ஞானிகள் 3 பேருக்கு அறிவிப்பு
ஸ்டாக்ஹோம்: இயற்பியல், வேதியியல், மருத்துவம் உள்பட 6 முக்கிய துறைகளுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. தினமும் ஒரு துறைக்கு என அக்.,12ம் தேதி வரை இந்தப் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, மருத்துவத்துறைக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கார்ல் டீசெரோத், ஜெர்மனியை சேர்ந்த பீட்டர் ஹெகெமன், ஜார்ஜ் நாகல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நோபல் பரிசு கமிட்டி அறிவித்துள்ளது.ஆப்டோஜெனெடிக்ஸ்நரம்பு செல்களை ஒளி மூலம் கட்டுப்படுத்தும் ஆப்டோஜெனெடிக்ஸ் தொழில்நுட்பம் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக இந்த நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், மூளையில் உள்ள நரம்பு செல்கள், நினைவுகள், உணர்வுகளை எப்படி உருவாக்குகின்றன என்பதைக் கண்டறியலாம்.