எஸ்.எஸ்.எல்.வி., டி - 3 ராக்கெட் 16ல் பாய்கிறது
சென்னை: இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், புவியை கண்காணிக்க, இ.ஓ.எஸ்., - 08 செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது.இதை சுமந்தபடி, எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, நாளை காலை, 9:17 மணிக்கு விண்ணில் பாயவிருந்தது.இந்நிலையில், இந்த ராக்கெட் நாளை மறுநாள் 16ம் தேதி காலை, 9:19 மணிக்கு ஏவப்பட உள்ளதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது.