தொழிற்பிரிவு கலந்தாய்வு - 3 நாட்களில் 963 பேர் ஒதுக்கீடு பெற்றனர்
அவற்றில் வராதவர்களின் மொத்த எண்ணிக்கை 121. வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 5. யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 11.11%. பொதுப்பிரிவு கவுன்சிலிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்கி 5 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 16,919 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,777 பேர். வராதவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,768. வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 90 பேர். ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 21.89%. இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஐந்தாவது நாளில் மட்டும் 4,942 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் வராதவர்கள் 1,023 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 8 பேர். இறுதியாக 3,911 பேர் ஒதுக்கீடு பெற்றனர். ஐந்தாம் நாளின் ஆப்சென்ட் விகிதம் 20.70%.