உள்ளூர் செய்திகள்

இன்று ஆசிரியர் கவுன்சிலிங் ஜூலை 31 வரை நடக்கிறது

திருப்பூர்: அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை, உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி, கலைப்பிரிவு ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சிலிங் அட்டவணை வெளியாகி உள்ளது.மே, 13 முதல் ஒன்றரை மாதமாக தொடர்ந்து ஆசிரியர்கள் விண்ணப்பித்த வந்த நிலையில், நாளை கவுன்சிலிங் துவங்குகிறது. இதற்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை (3ம் தேதி) விண்ணப்பங்களின் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்படுகிறது.வரும், 4 மற்றும், 5ல் திருத்தம் மேற்கொள்ளலாம். ஜூலை, 8 ல் வருவாய் மாவட்டத்துக்குள் கலை ஆசிரியர்களுக்கும், ஜூலை, 9 ல் மாவட்டம் விட்டு மாவட்டம் கலை ஆசிரியர்களுக்கும், 10 ம் தேதி, வருவாய் மாவட்டத்துக்குள் பட்டதாரி ஆசிரியர்கள், 11 முதல் 20 வரை பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் வருவாய் மாவட்டத்துக்குள் ஜூலை, 22, மாவட்டம் விட்டு மாவட்டம் ஜூலை, 23 ல் நடக்கிறது. தொடர்ந்து, ஜூலை, 31 வரை பல்வேறு பணியிட மாறுதல்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்