அரசு தொடக்கப் பள்ளிகளில் வரும் 31 வரை அட்மிஷன்
மாநிலம் முழுதும் உள்ள 31,336 அரசு தொடக்கப் பள்ளிகளில், மார்ச் 4ம் தேதி மாணவர் சேர்க்கை துவங்கியது.ஐந்து லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஜூலை 31ம் தேதி வரை 4.27 லட்சம் மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். இதில், ஒன்றாம் வகுப்பில் மட்டும் 2.95 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.ஆக., 1ம் தேதியுடன் மாணவர் சேர்க்கை முடிவடைய இருந்த நிலையில், எந்த குழந்தையும் கல்வி வாய்ப்பை இழக்கக்கூடாது என்பதற்காக, வரும் 31ம் தேதி வரை சேர்க்கையை தொடர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.