பெங்களூர் ஐ.ஐ.எஸ்சி -இல் 4 வருட இளநிலை படிப்பு
பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகம்(ஐ.ஐ.எஸ்சி), பலவிதமான அறிவியல் பிரிவுகளில், 4 வருட இளநிலை அறிவியல் படிப்புகளை தொடங்கியுள்ளது. நீங்கள் 10 மற்றும் 12 ம் வகுப்பு முடித்தவராக அல்லது அதற்கு சமமான படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். ஆனால் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை முக்கியப் பாடங்களாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். இந்த படிப்பிற்காக விண்ணப்பிக்கும் கடைசி நாள் மார்ச் 31. மேலும் கே.வி.பி.ஒய்-எஸ்.ஏ-2010, கே.வி.பி.ஒய்-எஸ்.பி-10, கே.வி.பி.ஒய்-எஸ்.எக்ஸ் (எஸ்.பி+2)-2010, ஐ.ஐ.டி-ஜெ.இ.இ(2010), ஏ.ஐ.இ.இ.இ(2010) மற்றும் ஏ.ஐ.பி.எம்.டி(2011) போன்ற தேசிய தேர்வுகளின் அடிப்படையில் இந்த படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.