உள்ளூர் செய்திகள்

வாட்ஸ் ஆப் குழுவில் போட்டி 5ம் வகுப்பு மாணவி அசத்தல்

மதுரை: மதுரையைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி, கொரோனா ஊரடங்கில், &'வாட்ஸ் ஆப்&' வழியே குடும்பத்தினரை இணைத்து, பல்வேறு போட்டிகளை நடத்தி அசத்தியுள்ளார்.மதுரை, சாந்தி நகரைச் சேர்ந்தவர், 9 வயது சிறுமி கெய்ட்லின் மின்டா; ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். அவர் கூறியதாவது:என் குடும்பத்தில் சிலர் கொரோனாவில் பாதித்து மீண்டாலும், நோய் குறித்த பயம் நீங்காததால், மனதை கலகலப்பாக மாற்றும் நோக்கில், &'வாட்ஸ் ஆப்&' வழி போட்டிகள் நடத்த திட்டமிட்டோம். இதற்காக நடிகரும், என் தந்தையுமான கிறிஸ்டோபர் சார்பில், &'த பிளஸ்டு பேமிலி, அம்மா ஈவிலின் பொன் மலர் குடும்பம் சார்பில், &'பிஷப் போத்திராஜுலு கசின்ஸ்&' என்ற &'வாட்ஸ் ஆப்&' குழுக்களை உருவாக்கினோம்.குறுக்கெழுத்து, பேன்ஸி டிரஸ், ஸ்பிரிட்சுவல் சிங்கர்ஸ், கவிதை, இசை, மோனோ ஆக்டிங், ஸ்டோரி டெல்லிங், நடனம், ஓவிய போட்டிகளை ஜூன் 1 - 10 வரை நடத்தினோம். இந்த குழுக்களின் வழி, மதுரை, சென்னை, கனடா, ஆக்லாந்து, சிங்கப்பூர் என பல நாடுகளில் உள்ள, 53 குடும்ப உறுப்பினர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். நான் ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு போஸ்டர் உருவாக்கி குழுக்களில், &'போஸ்ட்&' செய்தேன்.போட்டிகளில் பங்கேற்கும் முறைகள் குறித்து, சாம்பிள் &'வீடியோ&'வும் வெளியிட்டேன். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், ரொக்க பரிசுகள் ஆன்லைன் வழி வழங்கப்பட்டன. எனக்கு, &'பெஸ்ட் மோட்டிவேட்டர்&' விருது கிடைத்தது. கொரோனா பயம் போக்கவும், ஊரடங்கு விடுமுறையை பயனுள்ளதாக்கவும் நீங்களும் இதுபோன்ற போட்டிகள் நடத்தலாம். இவ்வாறு, அவர் கூறினார்.இவரை வாழ்த்த: risechristo@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்