மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்த 543 மாணவர்கள்
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வில், இதுவரை 543 மாணவர்கள் மெக்கானிக்கல் பாடப்பிரிவை தேர்வு செய்துள்ளனர். ஜுலை 1ம் தேதி முதல் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் கலந்தாய்வு முடிந்த நிலையில், மெக்கானிக்கல் பாடப்பிரிவிற்கு ஏராளமான மாணவர்கள் முக்கியத்தும் அளித்துள்ளனர். மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிமை 604 பேர் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர். இதில் 81 பேர் பங்கேற்கவில்லை. பங்கேற்றவர்களில் 6 பேர் இடங்களை தேர்வு செய்வதை தவிர்த்துவிட்டனர். 517 பேர் இடங்களைத் தேர்வு செய்து அனுமதி ஆணையைப் பெற்றுக் கொண்டனர். 1ம் தேதியில் இருந்து கடந்த மூன்று நாட்களாக கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட 1,709 பேரில் 1,559 பேர் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் பாதிக்கு பாதி பேர் என்ற விகிதத்தில் அதாவது 543 பேர் மெக்கானிக்கல் பிரிவைத் தேர்வு செய்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (இ.சி.இ.) பிரிவை 293 பேர் தேர்வு செய்துள்ளனர். எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் 208 பேரும், சிவில் பிரிவை 206 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை 119 பேரும் தேர்வு செய்துள்ளனர். பயோ டெக்னாலஜி படிப்பை வெறும் 6 பேர் மட்டுமே தேர்வு செய்துள்ளனர்.