உள்ளூர் செய்திகள்

மகாஜென்கோ நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்

மகாஜென்கோ நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்சார உற்பத்தியில் மிகவும் பெயர் பெற்ற 'மகாராஷ்டிரா ஸ்டேட் பவர் ஜெனரேஷன் கம்பெனி லிமிடெட் (மகாஜென்கோ)' அந்த மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் சிவில் பிரிவு ஜூனியர் இன்ஜினியரிங்கில் 81 இடங்களும், அஸிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் 85 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. முழுமையான காலியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும். வயதுமகாஜென்கோ நிறுவனத்தின் சிவில் பிரிவு ஜூனியர் இன்ஜினியர் மற்றும்அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க 07/05/2011அன்று அதிக பட்ச வயது 35 க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதிஅசிஸ்டெண்ட் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிக்க பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை எலக்ட்ரிகல், மெக்கானிகல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு துறையில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். இத்துடன் குறைந்த பட்சம் 3 ஆண்டு கால பணி அனுபவமும் தேவை. சிவில் பிரிவு ஜூனியர் இன்ஜினியரிங் பதவிக்கு விண்ணப்பிக்க சிவில், கன்ஸ்ட்ரக்சன், கன்ஸ்ட்ரக்சன் டெக்னாலஜி, ஸ்டரக்சுரல் இன்ஜினியரிங், சாயில் அண்டு பவுண்டேஷன் இன்ஜினியரிங், கன்ஸ்டரக்சன் டெக்னாலஜி அண்டு மேனேஜ்மெண்ட், வாட்டர் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் எதுவும் தேவையில்லை. இதர விபரங்கள் மகாஜென்கோ நிறுவனத்தின் காலியிடங்களுக்கு முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சான்றளிக்கப்பட்ட கல்வித் தகுதி சான்றிதழ் நகல்களையும், வயது, பணி அனுபவம், ஜாதிச் சான்று நகல்களையும் இணைத்து சாதாரண தபால் மூலமாக பின்வரும் முகவரிக்கு 14.05.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பதவிகளுக்கும் ரூ.500/ விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை ஸ்டேட் வங்கிக் கிளையில் மட்டுமே செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.250/ மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்தக் கட்டணத்துடன் வங்கிக்கான சேவைக் கட்டணமான ரூ.50/ஐயும் செலுத்த வேண்டியிருக்கும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:Post Box Number 8722.,Andheri (East)Mumbai - 400069 விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 14.05.2011இணைய தள முகவரி: http://recruitment.mahagenco.in/juniorpost_2011/Home/Default_old.aspx#


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்