உள்ளூர் செய்திகள்

மனித ஆற்றலில் இயங்கும் கார்

ஐ.ஐ.டி., மும்பை கல்வி நிறுவனத்தின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்த மூன்றாமாண்டு மாணவர்கள், புதிய ரக காரை வடிவமைத்துள்ளனர். இந்த கார் மனித ஆற்றலில் ஓடக்கூடியது. இது சைக்கிளை போன்று "பெடலை&' அழுத்துவதன் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு சுமார் 50 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இதில் மூன்று சக்கரங்கள் இடம் பெற்றுள்ளன. எதிர்திசையில் காற்று அடிக்கும்போதும் எளிதில் செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதே இதன் தனி சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இதை அமெரிக்காவில் நடந்த சர்வதேச மனித ஆற்றலில் இயங்கும் வாகனங்களின் கண்காட்சிக்காக ஐ.ஐ.டி., மும்பை மாணவர்கள் வடிவமைத்தனர். டீசல் மற்றும் பெட்ரோலை எரிபொருளாக பயன்படுத்தாத வாகனங்களை கண்டுபிடிக்கும் முயற்சிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவே இதுபோன்ற கண்காட்சிகள் உலகளவில் நடத்தப்படுகின்றன. இந்த காரை வடிவமைக்க ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு ஓ.என்.ஜி.சி., மற்றும் கெயில்., ஆகிய இரு பொதுத்துறை நிறுவனங்கள் நிதியுதவி வழங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்