உள்ளூர் செய்திகள்

வகுப்புகளை புறக்கணித்த மாணவ, மாணவியர்

சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்தக் கோரி சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் 9 ஆயிரம் பேர் வகுப்புகளை புறக்கணித்தனர். சென்னை, வேலூர், திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த மாவட்டங்களில் பள்ளி வாசல்களில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரும் கைதாகியுள்ளனர். சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது, இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை மாணவர்களிடம் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கால அவகாசம் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்