உள்ளூர் செய்திகள்

கல்விக்கடன் சிறப்பு முகாமிற்கு உத்தரவு

தகுதியான மாணவர்களுக்கு உயர்கல்வி கற்பதற்காக, கல்விக்கடன் வழங்க மறுப்பதால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்விக்கடனை சில வங்கிகள் தரமறுப்பதாக புகார்கள் அரசுக்கு வந்துள்ளன. அனைத்து மாவட்டங்களிலும், கலெக்டர் தலைமையில், சிறப்பு முகாம்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 4 லட்சம் வரை எந்தப் பிணையமும் இல்லாமல் கடன் அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், பல வங்கிகள் மாணவர்களிடம் 4 லட்சத்திற்கும் குறைவான கல்விக் கடன் தொகைக்கும் பிணையம் கேட்பதாகவும், சில வங்கிகள் பாதித் தொகையை மட்டும் கடனாக அளிப்பதால் மீதித் தொகையை செலுத்த பெற்றோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. பெற்றோர் வசிக்கும் பகுதியில் இருக்கும் வங்கியில்தான் வங்கிக் கடன் பெற முடியும், தொழிற்கல்வி படிப்புகளுக்கு மட்டுமே வங்கிக் கடன் அளிப்போம் என பல்வேறு நிபந்தனைகளை வங்கிகள் விதிக்கின்றன. இதனால் உயர் கல்வியில் சேர்ந்துவிட்டு வங்கிக் கடன் பெற பல மாணவர்களும், பெற்றோரும் வங்கிக்கு அலைந்து கொண்டு இருக்கின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் கல்விக் கடன் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்