உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கான இலவச லேப்-டாப்

தமிழக அரசு இலவசமாக வழங்க உள்ள லேப்-டாப்புகளை எந்த ஆண்டில் எந்த வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்ற உத்தரவு வெளியாகியுள்ளது. இது குறித்து, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், நடப்பு நிதியாண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுககும், பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் இரண்டாவது, நான்காவது ஆண்டு மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் லேப்-டாப் வழங்கப்படும். இரண்டாவது நிதியாண்டில் 2012-13ல் பிளஸ் 2 மாணவர்களுக்கும், கலை மற்றும் அறிவியல் கல்லூரகளில் மூன்றாவது ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் பொறியியல் கல்லூரிகளில் இரண்டாவது, நான்காவது ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் லேப்-டாப் அளிக்கப்படும். 3வது நிதியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாவது ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் லேப்-டாப் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்