இறுதிகட்ட மருத்துவக் கலந்தாய்வு துவக்கம்
52 எம்.பி.பி.எஸ். இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 30 இடங்களும், பிற்படுத்தபப்ட் (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 1 இடமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 8 இடங்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 7 இடங்களும், தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பைச் சேர்ந்த 5 இடங்களும், பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 1 இடமும் என காலியாக உள்ளன. இந்த இடங்களில் மாணவர்களை சேர்க்க காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் இன்று காலை 9 மணியளவில் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். பிற்பகலில் சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 6 பி.டி.எஸ். காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இன்றைய தினம் சுமார் 217 மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 2ம் தேதி ஏற்கனவே சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான மறு ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது.