சர்வதேச கல்வி அமைப்புகளுடன் ஒப்பந்தம்
சர்வதேச கல்வி அமைப்புகளுடன் பல்கலைக்கழகங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஏ. கல்யாணி தெரிவித்தார். இக்னோவின் பட்டமளிப்பு விழாவில் பேசிய துணை வேந்தர் ஏ. கல்யாணி, சர்வதேச அமைப்புகளுடனான ஒப்பந்தம் பல்கலைக்கழகத்தின் தரம் உயர்த்துவதற்கான ஒரு உன்னத முயற்சியாகும். இதேப்போல நாட்டில் உள்ள மற்ற திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களும், கல்வி குறித்த பல்வேறு சர்வதேச கருத்தரங்குகளும் மாநாடும் நடத்த வேண்டும். அப்போதுதான் நம்முடைய கல்வி தரத்தை பிற நாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிட முடியும். இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்களுக்கு மட்டுமின்றி பேராசிரியர்களுக்கும் உதவிகரமாக அமையும். புத்தகப் படிப்பு மட்டுமே பட்டப்படிப்பு ஆகாது. ஆராய்ச்சி தொடர்பான அறிவை மாணவர்களுக்கு ஊட்டுவது பேராசிரியர்களின் கடமை என்றார் அவர்.