உள்ளூர் செய்திகள்

பி.எட். இரண்டாம் கட்ட கலந்தாய்வு

சென்னை வெலிங்கடன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் 15, 16ம் தேதிகளில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் உள்ள காலி இடங்களுக்கு காலை 9 மணியில் இருந்து கலந்தாய்வு துவங்குகிறது. கலந்தாய்வில் பங்கேற்பவர்களுக்கான அழைப்புக் கடிதம் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஆகஸ்ட் 24ம் தேதி துவங்கிய முதல் கட்ட கலந்தாய்வு 30 தேதி வரை நடைபெற்றது. முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாமல் காலியாக இருந்த சேர்க்கை இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்