பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா
திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 28வது பட்டமளிப்பு விழா நவம்பர் மாதம் 10ம் தேதி நடைபெறுகிறது. நவம்பர் 2010 (தொலைதூரக் கல்வி மூலம் பயின்றவர்களும்), ஏப்ரல் 2011 ஆகிய பருவங்களில் நடந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம். பாரதிதாசன் பல்கலையின் இணைப்புக் கல்லூரிகளிலும், பல்கலை வளாகத்திலும் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். தபாலில் விண்ணப்பத்தை பெற விரும்பும் மாணவர்கள் கன்ட்ரோலர் ஆப் எக்ஸாமினேஷன், பாரதிதாசன் யூனிவர்சிட்டி, திருச்சிராப்பள்ளி-620 024 என்ற முகவரிக்கு 10 ரூபாய்க்கான தபால் தலை ஒட்டிய சுகமுகவரி எழுதிய உறையை அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு பல்கலையின் இணையதளத்தைப் பார்க்கவும்.