உள்ளூர் செய்திகள்

அண்ணா பல்கலையில் எம்.எஸ். சேர்க்கை

அண்ணா பல்கலையில் எம்.எஸ். படிப்பில் சேர தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது, எம்.எஸ். பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், மேலாண்மை அறிவியல், ஆர்கிடெக்சர் மற்றும் பிளானிங் பாடப்பிரிவுகளில் மாணவ சேர்க்கை நடைபெறுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல்/தொழில்நுட்பம்/ஆர்கிடெக்சர் பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பை 55 விழுக்காடு மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இப்படிப்பிற்கான விதிமுறைகள் மற்றும் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் ரூ.600க்கான டிடி (எஸ்.சி./எஸ்.டி. மாணவர்கள் 300க்கான டிடி) எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து பல்கலைக்கழக மாணவ சேர்க்கை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் மாதம் 11ம் தேதியாகும். மேலும் விவரங்கள் அறிய www.annauniv.edu இணையதளத்தைப் பார்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்