கட்டணத்தை குறைத்தது கோழிக்கோடு ஐ.ஐ.எம்.
கள்ளிக்கோட்டை: தங்களின் டியூஷன் கட்டணத்தை ஐ.ஐ.எம்-கள் உயர்த்தும் செய்திகள் அடிக்கடி வெளிவரும் நிலையில், தனது முதுநிலைப் படிப்பிற்கான டியூஷன் கட்டணத்தை 2012-2013 ஆம் ஆண்டு முதல் 3% அளவிற்கு கோழிக்கோடு ஐ.ஐ.எம். குறைத்துள்ளது. இதன்படி, ஆண்டுக்கு 10 லட்சம் டியூஷன் கட்டணமாக கட்ட வேண்டிய மாணவர்கள், அடுத்த கல்வியாண்டு முதல் ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் மட்டுமே கட்டினால் போதும். பணவீக்கத்தால் ஏற்படும் நெருக்கடியிலிருந்து மாணவர்களை காப்பாற்றவே "இந்த மாபெரும் சலுகை" என்று கோழிக்கோடு ஐ.ஐ.எம். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கடந்த 2 வருடங்களாக, மாணவர்களின் கடன் விகிதம், வருடத்திற்கு 2% முதல் 4% வரை அதிகரிக்கிறது. இதன்மூலம் மாணவர்களின் சுமை கூடுகிறது. இதை உணர்ந்ததால்தான், எங்கள் கல்வி நிறுவனம் இந்த சலுகையை அளித்துள்ளது என்று கோழிக்கோடு ஐ.ஐ.எம். வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.