வெளிமாநில மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் வேண்டும்
கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் வெளிமாநில மாணவர்கள் இரவு 10 மணிக்கு மேல் வெளியில் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தில் காவல்துறை சூப்பிரண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கல்லூரி முதல்வர்கள் - காவல்துறை ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்ட் எஸ். மனோகர் தலைமை தாங்கிப் பேசினார். அவர் பேசுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சில கல்லூரிகளில், பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளிமாநில மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்களை சேர்க்கும் போது அவர்களை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு சேர்க்க வேண்டும். இதற்கு முனபு ஏதேனும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்களை கண்டிப்பாக கல்லூரிகளில் சேர்க்கக் கூடாது. கல்லூரி விடுதிகளில் உள்ள வார்டர்கள் அங்கு தங்கியுள்ள மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வர வேண்டும். வெளிமாநில மாணவர்கள் இரவு 10 மணி முதல் காலை வரை கூட்டம், கூட்டமாக சற்றிக் கொண்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. விடுதியில் இருந்தோ, வெளியில் தங்கியுள்ள மாணவர்களோ இரவில் வெளியில் செல்வதை கல்லூரி நிர்வாகம் அறவே தடுத்து நிறுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார்.