உள்ளூர் செய்திகள்

கல்வி முறையை மாற்ற வேண்டும்

தற்போதைய பணிச் சூழலுக்கு ஏற்ப கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் பேராசிரியர் வேதபிரகாஷ் பேசினார். சென்னை பல்கலைக் கழகத்தின் 154வது பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழக ஆளுநர் ரோசய்யா, மாணவர்களுக்கு விருதுகளையும், பட்டங்களையும் வழங்கினார். விழாவில் கலந்து கொண்டு பேசிய உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலை இணைவேந்தருமான பழனியப்பன் பேசுகையில், பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளே உங்கள் அறிவும் ஆற்றலும் உங்களுக்காக மட்டுமல்லாமல், சமுதாயத்திற்கும் பயன்பட வேண்டும் என்று கூறினார். பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் பேராசிரியர் வேதபிரகாஷ் பேசுகையில், பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மேலோங்க வேண்டும். ஆய்வுக் கூடங்கள் பல்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆய்வுக் கூடங்கள் அந்தந்த வளாகங்களிலேயே இருக்க வேண்டும். ஆனால் பல கல்வி நிறுவனங்களில் வேறு வேறு இடங்களில்தான் உள்ளன. கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டிய நிலைமை உள்ளது. காரணம் தொழிலுக்கு ஏற்ப கல்வியை மாற்ற வேண்டும். தொழிற்சாலைகளும், பல்கலைக்கழகங்களும் சேர்ந்து கல்வியை வழங்க வேண்டும். தற்போது உயர் கல்வியில் தனியார் பங்களிப்பு அதிகம் உள்ளது. அதை வேரவேற்கிறேன். ஆனால், எல்லா தரப்பினருக்கும் தரமான கல்வியை தனியார் நிறுவனங்கள் தருவதில்லை. பல கல்வி நிறுவனங்கள் வர்த்தக நோக்கத்துடன் செயல்படுகின்றன. பணம் இருந்தால்தான் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியும். தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்