உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு வனவியல் பயிற்சி

விருதுநகர்: தமிழகத்தில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வன வளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, வனவியல் பயிற்சி வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில், பள்ளிகளில் பசுமைப் படை இயக்கம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில், மாவட்டம்தோறும் 10 பள்ளிகளிலிருந்து, தலா 10 மாணவர்கள் வீதம், தமிழகத்தில், 3,200 மாணவர்களுக்கு வன வளம் குறித்து பயிற்சி வழங்கப்படவுள்ளது. வனவியல் விரிவாக்க மையங்களில், நீர், நில மாசுபாடு, புவி வெப்பமடைதல், கடல் மட்டம் உயர்தல், சுற்றுச்சூழல், வன வளங்கள், தேசிய பூங்கா, பல்லுயிர் பரவல் உள்ளிட்டவை குறித்து, வனவியல் துறை அதிகாரிகள் பயிற்சிகளை வழங்குவர். இதற்கான பயண, உணவுச் செலவை, இலவசமாக அரசு வழங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்