உள்ளூர் செய்திகள்

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

இது குறித்து தொழில்நுட்பக் கல்வித் துறை வெளியிட்ட அறிக்கை: அடுத்த ஆண்டு பிப்ரவரி யில், தொழில்நுட்ப கல்வித் துறையால் நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்பும் அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சுப் பயிலகங்கள் மற்றும் தனித் தேர்வர்கள், விண்ணப்பப் படிவங்களை www.tndte.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை இணையதளம் மூலமாகவும் அல்லது நேரடியாகவும் பதிவு செய்யலாம். கல்வி தகுதி, தேர்வு கட்டணம் போன்ற விவரங்கள் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 044 - 2235 1018 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் டிசம்பர் 16. தேர்வுக் கட்டணம் அபராதமின்றி செலுத்த கடைசி நாள் டிசம்பர் 16. ஒரு விண்ணப்பப் படிவத்துக்கு 5 ரூபாய் அபராதத்துடன் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் டிசம்பர் 21. ஒரு விண்ணப்பப் படிவ கட்டணம் 15 ரூபாய். நேரடியாக அனுப்புபவர்கள் விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணம் சேர்த்து, வங்கி வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும். இணையதளம் மூலம் பதிவு செய்பவர்கள் விண்ணப்பப் படிவம் மற்றும் தேர்வுக் கட்டணம் சேர்த்து, இணையதளத்தில் குறிப்பிட்ட தபால் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். தனித் தேர்வர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 21. அங்கீகரிக்கப்பட்ட பயிலகங்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 23. குறிப்பிட்ட தேதிக்கு பின் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தேர்வானவர்கள் தங்களின் கல்வித் தகுதிச் சான்றிதழ்களை, தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு ஒரு வார காலத்துக்குள் இந்த அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். அவ்வாறு கல்வி தகுதிச் சான்றிதழ்கள் அனுப்பத் தவறினால் அவர்களது தேர்வுச் சான்றிதழ் ரத்து செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்