உள்ளூர் செய்திகள்

பொறியியல் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும்

பெரம்பலூர்: பெரம்பலூர் சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியின் இயந்திரவியல் துறை சார்பில், ஒரு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையின் உற்பத்தியியல் துறை இயக்குனர் பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:பொறியியல் கல்வி பயிலும் மாணவ மாணவிகள், கண்டிப்பாக ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும். இந்திய அரசாங்கம் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு, மிக அதிகமாக உதவித்தொகை வழங்கி ஊக்குவிக்கிறது. ஆகவே அனைத்து மாணவர்களும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், துணை முதல்வர் ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்களுக்கு ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல், மல்டிமீடியா போட்டி, வினாடி-வினா, அறிவுத்திறன் மற்றும் பலவிதமான போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்