உள்ளூர் செய்திகள்

இந்திய நிறுவனங்களில் ஆட்குறைப்பு இல்லை?

தற்போது நிலவி வரும் உலக பொருளாதாரச் சிக்கலின் விளைவாக பல நாடுகளில் வேலை குறைப்பு செய்யப்படுவது பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இந்திய நிறுவனங்கள் ஆட் குறைப்பு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கைக்கு இந்திய நிறுவனங்கள் இணங்கியுள்ளன. ‘உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் உற்பத்திச் செலவை குறைக்கவும் தேவைப்படும் அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தொழில்நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றி ஆராயவும் வளர்ச்சி விகிதத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் பணப் பிரச்னைகளை களையவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இந்த நிதியாண்டின் முதல் 3 காலாண்டுகளில் மட்டுமாவது வேலை குறைப்பு இருக்காது என தொழில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த 3 காலாண்டுகளும் வரும் டிசம்பரோடு முடிவடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்