உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்புக்காக சீனாவை நாடும் அமெரிக்கர்கள்

அமெரிக்காவில் துவங்கி உலகையே வாட்டும் தற்போதைய பொருளாதாரச் சூழலில் அமெரிக்கா தான் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். அமெரிக்க நிதி நெருக்கடியால் வேலை இழந்துள்ள பல நிதித் துறையினரும் தற்போது புதிய வேலைக்காக சீனாவை நாடத் துவங்கியுள்ளனர். எனினும் சீனாவின் மற்றும் பொருளாதாரக் கூறுகளின் மாறுபாட்டால் இவர்களுக்கு அங்கு நல்ல வாய்ப்புகள் இருக்கவில்லை என்றே கருதப்படுகிறது. அமெரிக்க வால் ஸ்ட்ரீட் நிபுணர்களை சீனா மதிப்பதில்லை என்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க பொருளாதாரச் சரிவுக்குக் காரணமானவர்கள் சீனாவுக்கும் பாதகத்தை ஏற்படுத்தலாம் என்றும் சீன பொருளாதாரத் துறை கருதுகிறது. நியூயார்க், ஹாங்காங் மற்றும் லண்டன் போன்ற அடிப்படையில் நல்ல மேம்பட்ட நிதிச் சந்தையை சீனா பெற்றிருக்கவில்லை என்பதால் வால் ஸ்ட்ரீட் நிபுணர்களுக்கான தேவை சீனாவில் இல்லை என்பது மற்றுமொரு காரணமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்