பெரியார் பல்கலையில் ஒருங்கிணைந்த வளாகத்தேர்வு
சேலம்: ஆகஸ்ட் 5ம் தேதி(நாளை) பெரியார் பல்கலையில் ஒருங்கிணைந்த வளாகத்தேர்வு நடக்கிறது. சேலம் பெரியார் பல்கலை வாழ்வியப்பணி வழிகாட்டி மற்றும் பணியமர்த்த மையமும், ஹெச்.சி.எல்., நிறுவனமும் இணைந்து, பெரியார் பல்கலை துறைகளுக்கும், இணைவு பெற்ற கல்லூரிகளில், 2013ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கும் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. ஆகஸ்ட் 5ம் தேதி பெரியார் பல்கலை, செனட் ஹாலில் நடக்கும் இந்த வளாகத்தேர்வில் கலந்து கொள்ள, பி.காம்., - எம்.காம்., - பி.ஏ., - எம்.ஏ., பொருளாதாரம், பி.பி.ஏ., - எம்.பி.ஏ., - நிதி இவைகளில் ஏதாவது ஒன்றினை படித்திருக்க வேண்டும். "அரியர்ஸ்" எதுவும் இருக்கக்கூடாது. 2013ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர் மட்டும், கலந்து கொள்ளலாம். முழு நேர கல்லூரி படிப்பாக இருக்க வேண்டும். ஆண்டு சம்பளம், 1.44 லட்சம் ரூபாய் முதல் 1.64 லட்ச ரூபாய் வரை, கிடைக்கும். தேர்வு செய்யப்பட்டவர்கள், சென்னை, கோயம்முத்தூர் பகுதிகளில் பணியமர்த்தப்பட உள்ளனர். இதில் கலந்து கொள்ள, ஆகஸ்ட் 5ம் தேதி காலை, 9.30 மணியிலிருந்து, 10 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் நான்கு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ மற்றும் தன் விபரப்பட்டியல் கொண்டு வர வேண்டும். நல்ல பேச்சுத்திறமை மற்றும் பகல், இரவு பணி செய்யவும், தேர்ச்சி பெற்றால், உடனடியாக பணியில் சேர தயாராகவும் இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு பெரியார் பல்கலை வேலைவாய்ப்பு அலுவலர் வெங்கடாசலபதியை, 91501 58111, 89257 70849 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.