மருந்தியல் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்
சென்னை: தமிழக மருத்துவக் கல்லூரிகளில், பார்மஸிஸ்ட் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. தமிழக மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில், மருந்தியல் பட்டயப்படிப்பு (பார்மஸிஸ்ட்) விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. விண்ணப்பங்களை, http://www.tnhealth.org/ www.tn.gov.in ஆகிய இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர், இந்த ஆண்டு டிச., 31ம் தேதி குறைந்தபட்சம், 17 வயதை பூர்த்தி செய்பவராகவும், அதிகபட்சம், 30 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியின மாணவர்களுக்கு, 35 வயது வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மேல்நிலை கல்வி குழுமத்தால் நடத்தப்படும் தேர்வில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், கணித பாடங்களில், தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, செயலர், தேர்வுக்குழு, 162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10 என்ற முகவரிக்கு, ஆக., 16ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.