உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவ அறிவியல் கலந்தாய்வு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc), மீன்வளம் (BFSc), பி.டெக்., உணவுத் தொழில்நுட்பம், பி.டெக்., கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய இளநிலை படிப்புகளில் சேருவதற்கான கவுன்சிலிங் சென்னையில் ஆக.,23 ல் தொடங்குகிறது. ரேங்க் பட்டியல் பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கட்-ஆப் மதிப்பெண் விவரத்தினை www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட கட்-ஆப் பெற்று அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்களும் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம். BVSc  238 இடங்கள்ஆக., 23 சிறப்பு இட ஒதுக்கீடு காலை 9 மணி;தொழில் பிரிவு காலை 11 மணி. ஆக.,26 கலையியல் பிரிவு காலை 9 மணிBFSc  34 இடங்கள் மற்றும் பி.டெக்.,  தலா 20 இடங்கள். ஆக., 27 சிறப்பு இட ஒதுக்கீடு, தொழில் பிரிவு காலை 9 மணி;கலையியல் பிரிவு காலை 11 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்