யு.ஜி.சி., நெட் தேர்வில் மாற்றம்?
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள யு.ஜி.சி., நெட் தேர்வு முறையில் திருத்தம் செய்யும் வாய்ப்பு உள்ளதாக யு.ஜி.சி., தென்கிழக்கு மண்டல உறுப்பினரான பேராசிரியர் டி.ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தற்போது நடைமுறையில் உள்ள நெட் தேர்வு, அப்ஜக்டிவ் முறை, நெகட்டிவ் மதிப்பெண் இல்லாததால், தேர்ச்சி விகிதம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது 5 சதவீதமாக இருந்த தேர்ச்சி, 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. தேர்வு முறை, பாடத்திட்டம், கேள்விகளின் கடினம், மதிப்பீடு முறை, கல்வித்தகுதி போன்றவற்றில் மாற்றம் செய்வது குறித்து ஆய்வுக் குழு, நாடு முழுவதும் கருத்துக் கேட்பு மற்றும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.