உள்ளூர் செய்திகள்

பிஎச்.டி., ஆய்வை தமிழில் சமர்ப்பிக்கலாம்!

மதுரை காமராஜ் பல்கலையில் அனைத்துப் பாடங்களிலும் தமிழில் பிஎச்.டி., ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை காமராஜ் பல்கலையில் பிஎச்.டி., ஆய்வுகள் தமிழ்த்துறை தவிர்த்து பிறதுறைகளில் ஆங்கிலத்திலேயே செய்து வருகின்றனர். இனி, பிறதுறைகளிலும் தமிழில் ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அகடமிக் கவுன்சில் மற்றும் செனட் கூட்டத்திலேயே இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் துறைமட்டுமின்றி அறிவியல் பிரிவுகளில் உள்ளவர்களும் தமிழில் தங்கள் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தர் ஆர்.கற்பககுமாரவேலுவிடம் கேட்டபோது, ‘மாணவர்கள், ஆசிரியர்கள் வசதிக்காக பல்கலை ஒழுங்காற்றுச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழில் ஆய்வு சமர்ப்பிக்க வசதி செய்துள்ளோம். டிசம்பரில் நடக்கும் சிண்டிகேட் ஒப்புதலுக்கு பின்னர் இந்த வசதி புத்தாண்டில் அமலுக்கு வரும்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்