உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டில் அறிவியல் கண்காட்சி துவக்கம்

செங்கல்பட்டு: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், செங்கல்பட்டு கல்வி மாவட்ட பள்ளிகள் அளவிலான ஜவகர்லால் நேரு அறிவியல் மற்றும் கணித கண்காட்சி செங்கல்பட்டு செயின்ட் மேரீஸ் மேல் நிலைப்பள்ளில் டிச. 2ம் தேதி துவங்கியது. துவக்க விழாவிற்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமணா தலைமை தாங்கினார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கரசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் கண்காட்சி விளக்க உரையாற்றினார். மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, யூசுப் அலி கண்காட்சியை திறந்து வைத்தார்.  கண்காட்சியில், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 167 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 1,260 மாணவ மாணவிகள், தங்கள் படைப்புகளை கண்காட்சியில் வைத்துள்ளனர். கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. மாவட்ட கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்