உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி மையத்தை சீர்படுத்துவது எப்போது?

ஈக்காடு: ஈக்காடு, அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து, நான்கு ஆண்டுகளாகியும், அதை ஊராட்சி நிர்வாகம் சீர்படுத்தாததால், சமுதாய கூட்டத்தில், குழந்தைகள் தஞ்சமடைந்துள்ளனர். திருவள்ளூர் ஒன்றியம், ஈக்காடு ஊராட்சி, பெத்தேல்புரம் கிராமத்தில், அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தின் மேற்கூரை சேதமடைந்து, மழைக் காலத்தில் தண்ணீர் உட்புகுந்ததால், மிகுந்த சேதமடைந்து விட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்த மையம் முற்றிலும், சேதமடைந்து பயன்பாடற்ற நிலைக்கு மாறிவிட்டது. இதையடுத்து, இங்கு பயின்ற குழந்தைகள், அருகில் உள்ள சமுதாய கூடத்திற்கு மாற்றப்பட்டு விட்டனர். தற்போது, இங்கு 10 குழந்தைகள் மட்டுமே வந்து செல்கின்றனர். குடிமையமாக மாறி விடுகிறது. இதுகுறித்து, பெற்றோர் தரப்பில் கூறுகையில், "அங்கன்வாடி மையம் அமைந்துள்ள இடம் முட்புதராக இருப்பதால், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் வந்து செல்கின்றன. மேலும், இரவில் குடிமையமாக மாறி விடுகிறது. பாதுகாப்பற்ற இடமாக இது மாறிவிட்டது" என்றனர்.புதிய கட்டடம் இதே வளாகத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. நோயாளிகள் வந்து சென்றாலும், சுற்றிலும் புதர் இருப்பதால் அச்சப்படுகின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த வளாகத்தை துாய்மைப்படுத்தி, சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை இடித்து, அகற்றி, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்