உள்ளூர் செய்திகள்

துர்நாற்றத்தால் பள்ளி மாணவர்கள் அவதி

எரிச்சநத்தம்: விருதுநகர் எரிச்சநத்தத்தில் ஓடை தூர்வாரபடாததால் மழைநீருடன் கழிவு நீர் கலந்துள்ளது. பள்ளி அருகே இந்த ஓடை இருப்பதால் துர்நாற்றத்தில் கல்வி கற்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். விருதுநகர் அழகாபுரி ரோட்டில் எரிச்சநத்தம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள கண்மாய் நிரம்பினால் மீதமுள்ள தண்ணீர் மாறுகால் வழியாக குமிழங்குளம் செல்ல வாறுகால் உள்ளது. இது பல ஆண்டுகளாக தூர் வாற படாததால் முட்செடி, நாணல் புல் வளர்ந்துள்ளது. மழை நீர் வழிந்தோட வழியில்லாததால் அங்கேயே தேங்கி நிற்கிறது. இதன் அருகே தான் நடையனேரி அரசு மேல்நிலை பள்ளி, எரிச்சநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1500 க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி அருகே உள்ள இந்த வாறுகாலில் கழிவுநீர் வழிந்தோட வழியில்லாததால் துர்நாற்றம் தாங்க முடியவில்லை. இதில் உருவாகும் கொசுக்களால் உடலில் அரிப்பு ஏற்பட்டுகொப்புளம் உருவாகிறது. ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை என்கின்றனர் இப்பகுதியினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்