மாவட்ட அளவிலான யோகா போட்டிகள்
தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே முறம்பு லிவி கோப் மெட்ரிக்., பள்ளியில் மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் நடந்தன. 27 பள்ளிகளை சேர்ந்த 1,200 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் விழாவிற்கு நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ் தலைமை வகித்தார். மனித நேய பாதுகாப்பு அமைப்பு நிறுவனர் அசோகன் ,திருநெல்வேலி மாவட்ட லயன்ஸ் கிளப் ஆளுநர் சிவகாமி ஆறுமுகம் பரிசுகள் வழங்கி பாராட்டினர். சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை திருத்தங்கல் - முத்துமாரி மெட்ரிக்., பள்ளி, ராஜபாளையம்-ரமணா மெட்ரிக் பள்ளி, தளவாய்புரம்-பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிக்., பள்ளி பெற்றது. சாம்பியன் பட்டத்தை ராஜபாளையம் வணிக வைசியர் பள்ளி, சங்கம்பட்டி-ஹரிஸ் மெட்ரிக்., பள்ளி, சுந்தரபாண்டியம்-விநாயகா நர்சரி பள்ளி பெற்றது.