கம்ப்யூட்டர்மய ஓட்டுனர் பயிற்சிக்கான ஒப்பந்தம்
மதுரை: மதுரை அருப்புக்கோட்டை ரோடு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியும், மும்பையின் மீட்டா நிறுவனமும் இணைந்து கம்ப்யூட்டர்மய ஓட்டுனர் பயிற்சிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சர்வதேச தரத்தில் முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட (சிமுலேட்டர்) ஓட்டுனர் பயிற்சி 20 மணி நேரம், தொழில்நுட்பப் பயிற்சி 20 மணி நேரம் மற்றும் 21 மணி நேர நேரடி ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பயிற்சி அளித்து வரும் மீட்டா நிறுவனம், தமிழகத்தில் முதன்முறையாக இக்கல்லூரியுடன் இணைந்து பயிற்சி அளிக்கிறது.