தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. தட்பவெப்பநிலை, காலநிலை புரிந்து கொள்ளுதல் குறித்து பள்ளி மாணவர்கள் 57 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தனர். நேஷனல் அகாடமி மெட்ரிக்., பள்ளி பிரீத்தி, வேலு மாணிக்கம் மெட்ரிக்., பள்ளி விஷ்ணு வர்ஷித், நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ., பள்ளி விகாஷ் அண்ணாமலை, அமிர்தா மெட்ரிக்., பள்ளி ஆனந்தகிருஷ்ணன், கமுதி கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முருகேஷ்வரன், சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பளளி தமிழ்செல்வி குழுக்களின் கட்டுரைகள் தேர்வாகின.