உள்ளூர் செய்திகள்

ஆண்டுக்கணக்கில் செயல்படாமல் உள்ள நூலகம்!

தேனி: ஆண்டுக்கணக்கில் செயல்படாமல் உள்ள நூலகம், தற்போது வேறு அலுவல் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது. நூலகத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தேனி அருகே குன்னூரில் இந்திரா நகர் உள்ளது. இப்பகுதியில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோர் வசித்து வருகின்றனர். 2009-10 நிதியாண்டில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பில் நூலக கட்டடம் கட்டப்பட்டது. நூலகம் துவக்கத்தில் முதல் இரண்டு மாதங்கள் முறையாக செயல்பட்டது. ஓய்வுபெற்ற மில் தொழிலாளி ஒருவர் இந்த நூலகத்தை பராமரித்து வந்தார். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முன் வந்து புத்தகங்கள் வழங்கினர். இதன்பிறகு சில ஆண்டுகளாக இந்த நூலகம் செயல்படவில்லை. தற்போது நூலக கட்டடத்தில் வேறு அலுவலக பணிகள் நடக்கிறது. இங்கிருந்த புத்தகங்கள் தூசி படிந்துள்ளது. நூலகம் செயல்பட வேண்டும் என்ற இந்த பகுதி மக்களின் வலியுறுத்தியுள்ளனர். இதுபோல், மாவட்டத்தில் பல இடங்களில் நூலக கட்டடங்கள் மாற்று அலுவல் பணிக்கு பயன்பட்டு வருகிறது. நூலக கட்டடங்களை முறையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்