மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள்
பரமக்குடி: மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள், பரமக்குடி சவுராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் பரமக்குடி, ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவில் பேச்சு, கவிதை, கட்டுரை, வினாடி-வினா, ஓவியம், கிராமிய நடனம், இசை உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளி மாணவி சாருகா (பாட்டு), கபிலேஷ்கண்ணன்(வினாடி-வினா), கீழமுஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவர் நிதிஷ்(பேச்சு), அருண்பாண்டியன், பிரதாப்சிங், கோகுலகண்ணன் (வினாடி-வினா), கபில்ரகுமான்(கவிதை), அகல்யா (கட்டுரை) முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு பாராட்டி பரிசளித்தார். இவர்கள் வேலூரில் நடக்கவுள்ள மாநில போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.