உள்ளூர் செய்திகள்

மதுரை மண்டல கல்விச் செய்திகள்

கிரிக்கெட் வீரர்கள் தேர்வு: சோழவந்தான் அரசன்சண்முகனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு, புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் வீரர்கள் தேர்வு முகாம் நடந்தது. 14 முதல் 34 வயது வரை பேட்டிங், பவுலிங், ஆல் ரவுண்டருக்கு தேர்வு செய்யப்பட்டனர். விழிப்புணர்வு கருத்தரங்கு: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் குலமங்கலத்தில் நடந்தது. எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாமில் திட்ட அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். எய்ட்ஸ் மற்றும் பாலியல் கல்வி குறித்து சமூக ஆர்வலர் பாலு பேசினார். அறிவியல் கண்காட்சி: ஏனாதி விக்ரம் பாலிடெக்னிக் கல்லுாரியில் பள்ளி மாணவர்களுக்கான சந்திராயன் அறிவியல் கண்காட்சி நடந்தது. மதுரை, சிவகங்கை மாவட்ட பள்ளி மாணவர்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன. ஆண்டுவிழா: பசுமலை தேவசகாயம் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. நிர்வாகக்குழுத் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு பொருளாளர் செல்வப்பெரியார், டாக்டர் ராஜேஸ்வரி பரிசுகளை வழங்கினர். பசுமை கருத்தரங்கு: ஏனாதி விக்ரம் பொறியியல் கல்லுாரியில் மட்கிய பொருட்கள் மூலம் பசுமை காத்தல் குறித்த கருத்தரங்கு நடந்தது. சோரோப்டிமிஸ்ட் இன்டர்நேஷனல் மதுரை துணைத் தலைவர் லதா பேசுகையில், "செயற்கை உரங்களால் விலங்கு, மனிதர்களோடு மண்ணும் பாதிக்கப்படுகிறது. எளிதில் கிடைக்கும் உயிர்ச்சத்துமிக்க இயற்கை கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கலாம்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்