கல்வி உதவித்தொகை காலக்கெடு நீட்டிப்பு
ராமநாதபுரம்: சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் முஸ்லிம், கிறிஸ்தவர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி, ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 2015-16 கல்வி ஆண்டுக்கான உதவித்தொகைக்கு பெறுவதற்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஒன்று முதல் 8 வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பங்களை தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் செப்., 25 வரை ஒப்படைக்கலாம். 9 முதல் பட்ட மேற்படிப்பு வரை பயிலும் மாணவர்கள் விண்ணப்பங்களை www.scholarship.gov.in என்ற இணையதள முகவரியில் அக்.,15 வரை ஒப்படைக்கலாம் என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.