உள்ளூர் செய்திகள்

மருத்துவ படிப்பு கலந்தாய்வு நிறைவு

தமிழகத்தில், மருத்துவ படிப்புகளுக்கான, மூன்று கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், மீதமிருந்த, 82 எம்.பி.பி.எஸ்.,-85 பி.டி.எஸ்.,-167 இடங்களுக்கான கலந்தாய்வு, இரண்டு நாட்களாக, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் நடந்தது. கலந்தாய்வு நிறைவடைந்தது. 3,500 பேர் பங்கேற்றனர். இவர்களில், 141 பேர் இடங்கள் ஒதுக்கீடு பெற்றனர். சுய நிதி கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - 1 ; பி.டி.எஸ்., 25 இடங்கள் காலியாக உள்ளன. இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுய நிதி கல்லுாரிகளுக்கு திரும்பி விடும். இரண்டு நாட்களாக கலந்தாய்வில் இடம் தேர்வு செய்த மாணவர்களுக்கு, ஒதுக்கீடு ஆணை வழங்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், உத்தரவு கிடைத்ததும், ஒரிரு நாளில் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்