அழகப்பா பல்கலை தேர்வு அறிவிப்பு
விருதுநகர்: காரைக்குடி அழகப்பா பல்கலையில் தொலை தூர கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு டிச.,26 முதல் தேர்வுகள் நடக்க உள்ளது. அதற்கான விண்ணப்பத்தை ஆன் லைனில் அக்டோபர் 26 லிருந்து நவ.,9க்குள் www.alagappauniversity.ac.in இணைய தளம் மூலமாக தேர்வு கட்டணம் செலுத்தி உடனடியாக ஹால்டிக்கெட் எடுத்து கொள்ளலாம்.மேலும் விருதுநகர் அழகப்பா பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வாயிலாகவும் கட்டணத்தை செலுத்தி ஹால் டிக்கெட் பெறலாம். செமஸ்டர் முறை தேர்வு எழுதுபவர்களும், தேர்வு எழுதி தவறியவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அழகப்பா பல்கலை விருதுநகர் கிளை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனமுதன்மை நிர்வாகி காசிராமன் தெரிவித்தார்.