உள்ளூர் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சிலிங்

ராமநாதபுரம்: பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சிலிங் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் அக்., 26 ல் துவங்குகிறது.பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை 2 க்கான மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கவுன்சிலிங் அக்., 26 காலை 9:30 மணிக்கு நடக்கிறது.பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை 2 க்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கவுன்சிலிங் அக்., 27 காலை 9:30 மணிக்கு நடக்கிறது.இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியருக்கான பதவி உயர்வு கவுன்சிலிங் அக்., 30 காலை 9:30 மணிக்கு ஆன்லைன் மூலம் நடக்கிறது.  இதனை முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு தெரிவித்தார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்