உள்ளூர் செய்திகள்

எஸ்.ஆர்.எம்., பல்கலை நுழைவுத்தேர்வு அறிவிப்பு

சென்னை: இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை, எஸ்.ஆர்.எம்., பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 2016ம் ஆண்டு படிப்பில் சேர, &'ஆன்லைன்&' நுழைவுத் தேர்வு ஏப்ரலில் நடக்கிறது. எஸ்.ஆர்.எம்., - ஜே.இ.இ.இ., தேர்வு, ஏப்., 19 முதல், 25ம் தேதி வரை; எஸ்.ஆர்.எம்., கீட் மற்றும் கேட் தேர்வு ஏப்., 23, 24ல் துவங்குகின்றன. இதற்கு மாணவர் பதிவு அக்., 19ல் துவங்கியுள்ளது; மார்ச், 15ல் முடிகிறது. தேர்வு பிரிவுக்கு, மார்ச், 26 முதல், 30ம் தேதி வரை பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு, www.srmuniv.ac.in இணையதளம், admissions.india@srmuniv.ac.in மெயில் மற்றும் 044 - 2745 5510, 4743 7500 போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்