உள்ளூர் செய்திகள்

யோசிப்புத் திறனை வளர்ப்பது எப்படி?

கோவ: தனிமையை கற்றுக் கொள்ளும் போது, யோசிப்புத் திறன் மிக அழகாக வரும்; மனம் ஒருமுகப்பட்டால், சூட்சமப் பார்வை விரியும், என, எழுத்தாளர் பாலகுமாரன் பேசினார். தட்சிண அறக்கட்டளை சார்பில், தட்சிணணோத்ஸவ் எனும் நிகழ்ச்சி, கோவை, மணி மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், குருவின் கிருபை எனும் தலைப்பில், எழுத்தாளர் பாலகுமாரன் பேசியதாவது: எல்லாரும் சாவு வந்து விடுமோ என பயந்து சாகின்றனர்; தன்னை அறிந்தவன் மட்டுமே, மரணத்தை கண்டு அஞ்சாமல், சாவை வரவேற்கிறான்; அவனால், மரணம் தள்ளிப் போகவும் கூடும். தன்னை அறிதல் விஷயத்தில், அமைதியும், மவுனமும் தேவைப்படுகிறது. தனிமையை கற்றுக்கொள்ளும் போது, யோசிப்புத் திறன் மிக அழகாக வரும்; மனம் ஒருமுகப்பட்டால், சூட்சமப் பார்வை விரிந்து வரும். தன்னை அறியும் ஆவல் இருந்தால், அற்புதமான வாழ்க்கை அமையும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, தட்சிணா அறக்கட்டளை நிறுவனர் சிவா, கே.ஜி., மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம் பேசினர். பார்க் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்