வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு
புதுடில்லி: கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, இந்த 2015ம் ஆண்டில், இந்தியாவில் கல்வி கற்க வந்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக மலேசியாவிலிருந்தும், அதற்கடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச நாட்டிலிருந்து அதிகளவில் மாணவர்கள் வந்துள்ளதாக ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.