உள்ளூர் செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு பயிற்சி

ராமநாதபுரம்: பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், குழந்தைநேய பள்ளிகளாக மாற்றவும், கிராமப்பணிகள் வளர்ச்சி சங்கம்(ஆர்.டபிள்யூ.டி.எஸ்) சார்பில் பெற்றோருக்கு பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்படி, வாலிநோக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அடஞ்சேரி கிராமத்தில் பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி நடந்தது. மதுரை சமம் குடிமக்கள் இயக்க தலைவர் வக்கீல் ரோசன் பங்கேற்று பயற்சியளித்தார். அடுங்சேரி கிராம செயலாளர் கருப்பையா முன்னிலை வகித்தார். கிராமப்பணிகள் வளர்ச்சிக் குழுமத்தின் இயக்குனர் சாத்தையா தலைமை வகித்தார்.திட்ட ஒருங்கிணைப்பாளர் கனகவள்ளி உள்பட பலர் பங்கேற்றனர். பனை தொழிலாளர்கள் 60 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்